

சென்னை,
சென்னையில் பெயிண்டரை கல்லால் தாக்கி கொலை செய்த நண்பரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை காரப்பாக்கம் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பெயிண்டர் ஜீவா (வயது 27). இவர் கடந்த 21-ம் தேதி தனது பிறந்தநாளையொட்டி நண்பரான ஆனந்தராஜை அழைத்துக் கொண்டு காரப்பாக்கம் ஓ.எம்.ஆர். சர்வீஸ் சாலை பகுதியில் மது அருந்தியதாக கூறப்படுகிறது.
பின்னர் இருவரும் வீட்டுக்கு செல்லும் வழியில் வாக்குவாதம் ஏற்பட்டு ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர். அப்போது ஆத்திரமடைந்த ஆனந்தராஜ், ஜீவாவை கீழே தள்ளிவிட்டு சாலையில் கிடந்த பெரிய கல்லை எடுத்து அவரது தலையில் போட்டு கொலை செய்தார்.
இதுகுறித்து கண்ணகிநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையிலான தனிப்படை போலீசார் தலைமறைவாக இருந்த ஆனந்தராஜை, சேலம் பகுதியில் கைது செய்தனர். பின்னர் ஆனந்தராஜ் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில், தன்னிடம் ஜீவா வாங்கிய கடன் தொகையில் ரூ.3 ஆயிரத்தை திருப்பிக்கேட்கும் போது ஏற்பட்ட தகராறில், கொலை செய்ததாக தெரிவித்ததாக போலீசார் கூறினர்.