பழனி முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கை ரூ.2.77 கோடி

கோவில் பணியாளர்கள், வங்கி அலுவலர்கள், தன்னார்வலர்கள் உள்ளிட்டோர் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.
பழனி முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கை ரூ.2.77 கோடி
Published on

பழனி,

உலகப் புகழ்பெற்ற பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய தமிழகம் மட்டுமின்றி கேரளம், ஆந்திரா, மராட்டியம் உள்பட வெளிமாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். அவ்வாறு வரும் பக்தர்கள் கோவிலில் தரிசனம் முடித்த பின்னர் அங்குள்ள உண்டியல்களில் பணம், நகைகள், நவதானியங்களை காணிக்கையாக செலுத்துகின்றனர். இந்த உண்டியல்கள் யாவும் நிரம்பியவுடன், அதிலுள்ள பணம், பொருட்கள் கோவில் நிர்வாகம் சார்பில் எண்ணி அளவிடப்படுகிறது.

அதன்படி, கடந்த 12-ந்தேதி பழனி முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது. இந்த நிலையில் நேற்று கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி மீண்டும் நடைபெற்றது. இதையொட்டி உண்டியல்கள் திறக்கப்பட்டு, அதிலுள்ள பணம், தங்கம், வெள்ளிப்பொருட்கள் என அனைத்தும் மலைக்கோவிலில் உள்ள கார்த்திகை மண்டபத்துக்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் அங்கு காணிக்கை பொருட்கள் தனித்தனியாக பிரிக்கப்பட்டு எண்ணப்பட்டது.

கோவில் பணியாளர்கள், வங்கி அலுவலர்கள், தன்னார்வலர்கள் உள்ளிட்டோர் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். முடிவில் ரூ.2 கோடியே 77 லட்சத்து 77 ஆயிரத்து 75-ம், தங்கம் 526 கிராம், வெள்ளி 25 கிலோ 546 கிராம், வெளிநாட்டு கரன்சி நோட்டுகள் 611 ஆகியவை காணிக்கையாக கிடைத்தன.

இதேபோல் பழனி முருகன் கோவில் உபகோவில்களிலும் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடந்தது. இதில், பழனி பெரியாவுடையார் கோவிலில் ரூ.2 லட்சத்து 54 ஆயிரத்து 275-ம், பாலசமுத்திரம் பெருமாள் கோவிலில் ரூ.51 ஆயிரத்து 270-ம், ஒட்டன்சத்திரம் காமாட்சி அம்மன் கோவிலில் ரூ.10 ஆயிரத்து 503-ம், குழந்தை வேலப்பர் கோவிலில் ரூ.82 ஆயிரத்து 353-ம் காணிக்கையாக கிடைத்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com