பழனி கலைக்கல்லூரியில் மாணவர்களை தாக்கிய பேராசிரியர் சஸ்பெண்ட்

பேராசிரியர் கவுதமன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாணவர்கள் புகார் அளித்தனர்.
திண்டுக்கல்
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் பழனியாண்டவர் கலைக்கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரி பழனி கோவிலுக்கு உட்பட்டதாகும். இதனிடையே, இந்த கல்லூரியில் சுயநிதி பிரிவு வணிகவியல் துறையில் கவுதமன் என்பவர் பேராசிரியராக பணியாற்றி வந்தார். அவர் வகுப்பறைக்குள் மாணவர்களை நாற்காலியை கொண்டு தாக்குவதும், ஆபாச வார்த்தைகளில் பேசிய வீடியோ சமூகவலைதளத்தில் வைரலானது.
இதுதொடர்பாக பேராசிரியர் கவுதமன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாணவர்கள் புகார் அளித்தனர். இந்த புகார் குறித்து விசாரணை நடத்திய கல்லூரி நிர்வாகம், பேராசிரியர் கவுதமனை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டது.
Related Tags :
Next Story






