கியர் பாக்ஸ் பழுது எதிரொலி: பழனி ரோப் கார் ஆன்லைன் முன்பதிவு நிறுத்தம் - கோவில் நிர்வாகம் அறிவிப்பு

கியர் பாக்ஸ் ஷாப்ட்டில் ஏற்பட்ட பழுது காரணமாக, ரோப் கார் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
ரோப் கார் சேவை
கோப்புப்படம்
Published on: 

திண்டுக்கல்,

பழனி ரோப் கார் ஆன்லைன் முன்பதி அடுத்த மாதம் 5-ந்தேதி வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ரோப் கார் சேவை

திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் அடிவாரத்தில் இருந்து மலைக்கோவிலுக்கு எளிதாகச் சென்று வருவதற்காக ரோப் கார் சேவை உள்ளது. காற்றின் வேகத்தைப் பொறுத்து இயக்கப்படும் இந்த ரோப் காரில், பக்தர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு மாதாந்திர மற்றும் வருடாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

பராமரிப்புப் பணி

அதன்படி, இந்த ஆண்டுக்கான வருடாந்திர பராமரிப்புப் பணி கடந்த ஜூலை 20-ந்தேதி முதல் செப்டம்பர் 21-ந்தேதி வரை நடைபெற்றது. இதைத்தொடர்ந்து 22-ந்தேதி முதல் ரோப் கார் சேவை மீண்டும் தொடங்கி நடைபெற்று வந்தது.

ஆன்லைன் முன்பதிவு நிறுத்தம்

இந்த நிலையில், கடந்த 20-ந்தேதி காலை ரோப் காரில் உள்ள கியர் பாக்ஸ் ஷாப்ட்டில் திடீரென பழுது ஏற்பட்டது. இதையடுத்து ரோப் கார் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. பழுதடைந்த கியர் பாக்ஸ் ஷாப்ட்டை சீரமைப்பதற்காக கோவையில் உள்ள நிறுவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இதனிடையே ரோப் கார் சேவை நிறுத்தப்பட்டுள்ளதால், அதற்கான ஆன்லைன் முன்பதிவும் அடுத்த மாதம் (நவம்பர்) 5-ந்தேதி வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பழுது நீக்கப்பட்டு சோதனை ஓட்டம் நடந்த பின்பு சேவை தொடங்கப்பட உள்ளது. எனவே பக்தர்கள் மலைக்கோவிலுக்குச் செல்ல படிப்பாதை, யானைப்பாதை மற்றும் மின்இழுவை ரெயில் சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com