

சேலம்,
சேலம் அருகே கருப்பூர் பகுதியில் பெரியார் பல்கலைக்கழகம், அரசு என்ஜினீயரிங் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இக்கல்லூரிகளில் உள்ள விடுதியில் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர்.
நேற்று முன்தினம் மாலை திடீரென பலத்த காற்றுடன் மழை பெய்தது. அப்போது பெரியார் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள பனை மரங்கள் மீது இடி, மின்னல் தாக்கியதால் பச்சை பனைமரம் தீப்பிடித்து எரிந்தது.
இதனை கண்ட பல்கலைக்கழக மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்தவித பாதிப்பு ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.