பனைமரத்தொழிலாளர்கள், நல வாரியத்தில் உறுப்பினராக சேர வேண்டும்

பனைமரத்தொழிலாளர்கள், நல வாரியத்தில் உறுப்பினராக சேர வேண்டும் என வாரியத்தலைவர் ஏர்ணாவூர் நாராயணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பனைமரத்தொழிலாளர்கள், நல வாரியத்தில் உறுப்பினராக சேர வேண்டும்
Published on

நீடாமங்கலம்:

பனைமரத்தொழிலாளர்கள், நல வாரியத்தில் உறுப்பினராக சேர வேண்டும் என வாரியத்தலைவர் ஏர்ணாவூர் நாராயணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பனைத்திருவிழா

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் பனைத்திருவிழா நடந்தது. விழாவுக்கு சுற்றுச்சூழல் அமைப்பின் திருவாரூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜானகிராமன் தலைமை தாங்கினார்.இதில் தமிழ்நாடு பனைமரத் தொழிலாளர்கள் நலவாரியத்தலைவர் ஏர்ணாவூர் நாராயணன் கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி விழாவை தொடங்கி வைத்து பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

திருக்குறள்

திருவள்ளுவர் பனை ஓலையில் தான் திருக்குறள்களை எழுதினார். பனை ஓலையில் தான் அந்த காலத்தில் ஜாதகங்கள் எழுதப்பட்டன. மன்னர்கள் தூது அனுப்ப பனை ஓலையை தான் பயன்படுத்தி வந்தனர். படிப்பிற்கும் பனை ஓலை தான் பயன்படுத்தப்பட்டது.

வீடுகட்டுவதற்கும் பனை ஓலை தான் பயன்படுத்தப்படுகிறது. தமிழ்நாடு முழுவதும் பசுமையாக இருக்க வேண்டும் என தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விரும்புகிறார். இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

நலவாரியத்தில் உறுப்பினராக வேண்டும்

பனைமரத்தொழிலாளர்கள் அனைவரும் நல வாரியத்தில் உறுப்பினராக சேர வேண்டும். வாரிய உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில் தமிழ்நாடு உடல் உழைப்பு தொழிலாளர்கள் சமூக பாதுகாப்பு மற்றும் நலவாரிய செயலாளர் ஏ.திவ்யநாதன், தஞ்சாவூர் வேளாண் செயற்பாட்டாளர் வக்கீல் ஜெ.ஜீவக்குமார், நீடாமங்கலம் ஒன்றியக்குழுத்தலைவர் சோம.செந்தமிழ்ச்செல்வன் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர்.

விழாவில் பனைமரம் தொடர்பாக கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. முன்னதாக விழா தலைமை ஒருங்கிணைப்பாளர் மு.ராஜவேலு வரவேற்றார். முடிவில் பசுமை எட்வின் நன்றி கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com