பாம்பன் புதிய தூக்குப்பாலத்தை திறந்து ஆய்வு

சோதனை ஓட்டமாக புதிய தூக்குப் பாலம் சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக திறந்து ஆய்வு செய்யப்பட்டது.
பாம்பன் புதிய தூக்குப்பாலத்தை திறந்து ஆய்வு
Published on: 

ராமேசுவரம்,

பாம்பன் பழைய ரெயில் தூக்குப்பாலத்தை அகற்றும் பணியானது கடந்த பிப்ரவரி மாதம் முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் ஒரு பகுதி முழுமையாக அகற்றப்பட்டுள்ளது. தற்போது 2-ம் பாதி வெல்டிங் செய்து அகற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. வருகிற டிசம்பர் மாதத்திற்குள் பழைய தூக்குப்பாலத்தை முழுமையாக அகற்றும் பணிகளை முடிக்க ரெயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. அதனால் டிசம்பர் மாத இறுதி அல்லது ஜனவரி மாதத்தில் இருந்து புதிய தூக்குப் பாலம் திறக்கப்பட்டு வழக்கம்போல் பாம்பன் கால்வாய் வழியாக படகு மற்றும் கப்பல் போக்குவரத்து தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல் விரைவில் பாம்பன் புதிய தூக்குப்பாலம் கப்பல், படகுகள் கடந்து செல்வதற்காக திறக்கப்பட உள்ளதால் இதையொட்டி நேற்று சோதனை ஓட்டமாக புதிய தூக்குப் பாலம் சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக திறந்து ஆய்வு செய்யப்பட்டது. கப்பல் மற்றும் படகுகள் கடந்து செல்ல புதிய தூக்குப்பாலம் விரைவில் திறக்கப்பட உள்ளதால் அதை பார்க்கும் ஆர்வத்தில் சுற்றுலா பயணிகள் இருந்து வருகின்றனர்.

X