

சென்னை,
தமிழக முதல்-அமைச்சர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
சென்னை மாகாணத்தின் இரண்டாவது முதல்-அமைச்சர் பனகல் அரசர் பிறந்தநாளில் அவருக்கு எனது புகழ் வணக்கத்தைச் செலுத்துகிறேன்.
நீதிக்கட்சியை உருவாக்கியவர்களில் ஒருவராகத் திகழ்ந்த அவர், அனைவருக்கும் சமமான வாய்ப்பை உறுதிப்படுத்தினார். அவரது முற்போக்கான சீர்திருத்தங்கள், பின்னாளில் தந்தை பெரியார் முன்னெடுத்த சுயமரியாதை மற்றும் சமூக நீதிப் போராட்டங்களுக்கு வலுவான அடித்தளமாக அமைந்தன.
கல்வி வளர்ச்சிக்கான அவரது அக்கறை, மக்கள் நலன் சார்ந்த நிர்வாகப் பார்வை ஆகியவை இன்றும் வழிகாட்டும் உயரிய மரபுகளாகத் திகழ்கின்றன. பனகல் அரசரின் புகழ் தமிழ்நாட்டின் சமூக நீதி வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.