பணகுடியில் பரபரப்பு! வாகனங்களை அடித்து நொறுக்கிய தந்தை, மகன் கைது

போலீசார் விசாரணையில், ஆனந்த் மற்றும் அவரது மகன் விஷ்ணு இருவரும் மது போதையில் வாகனங்களை சேதப்படுத்தியது தெரிய வந்தது.
vehicles smash
Published on: 

நெல்லை,

வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களை சேதப்படுத்திய தந்தை, மகனை போலீசார் கைது செய்தனர்.

வாகனங்கள் சேதம்

நெல்லை மாவட்டம் பணகுடியில் லுத்தரன் சர்ச் தெருவில் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களின் கண்ணாடிகள் மற்றும் பிற பாகங்கள் உடைத்து சேதப்படுத்தப்பட்டிருந்தன. இது குறித்து வாகனங்களின் உரிமையாளர்கள் பணகுடி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

கைது

போலீசார் நடத்திய விசாரணையில், அதே பகுதியை சேர்ந்த ஆனந்த் மற்றும் அவரது மகன் விஷ்ணு இருவரும் மது போதையில் வாகனங்களை சேதப்படுத்தியது தெரிய வந்தது. இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com