

காவேரிப்பாக்கம்
பாணாவரம் போலீஸ் நிலையத்துக்கு ஐ.எஸ்.ஓ. தரச்சான்று வழங்கப்பட்டுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரம் போலீஸ் நிலைய வளாகம் தூய்மையாகவும், சுகாதாரமாகவும் இருப்பதை பாராட்டி ஐ.எஸ்.ஓ. தரச்சான்று வழங்க முடிவுசெய்யப்பட்டது. இந்தநிலையில் நேற்று ஐ.எஸ்.ஓ. தணிக்கையாளர் கார்த்திகேயன், பாணாவரம் போலீஸ் நிலையத்தை பாராட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரண் ஸ்ருதியிடம் தரச்சான்றிதழை வழங்கினார். இதில் கூடுதல் போலீஸ்சூப்பிரண்டு விஸ்வேஸ்வரய்யா, அரக்கோணம் உதவி போலீஸ் சூப்பிரண்டு யாதவ் கிருஷ் அசோக், பாணாவரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமிபதி, சப்- இன்ஸ்பெக்டர்கள் ராஜா, பார்த்திபன் உள்ளிட்ட போலீசார் உடனிருந்தனர்.