ஊராட்சி மன்ற தலைவருக்கு கொடியேற்ற அனுமதி மறுப்பு

ஊராட்சி மன்ற தலைவருக்கு கொடியேற்ற அனுமதி மறுப்பு கள்ளக்குறிச்சி கலெக்டரிடம் பா.ஜ.க.வினர் மனு
ஊராட்சி மன்ற தலைவருக்கு கொடியேற்ற அனுமதி மறுப்பு
Published on

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி பா.ஜ.க.மாவட்ட தலைவர் பாலசுந்தரம் தலைமையில், மாநில பொதுச்செயலாளர் கார்த்தியாயினி, துணைத்தலைவர் சம்பத், பொறுப்பாளர்கள் வக்கீல் செல்வநாயகம், அசோக்குமார், ஊடக பிரிவு தலைவர் மகேந்திரன், மாவட்ட துணை தலைவர் ராஜேஷ் மற்றும் நிர்வாகிகள் கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமாரிடம் மனு கொடுத்தனர். அந்த மனுவில் சின்னசேலம் தாலுகாவுக்குட்பட்ட எடுத்தவாய்நத்தம் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் ஒவ்வொரு ஆண்டும் சுதந்திரதினத்தன்று ஊராட்சி மன்ற தலைவர் கொடியேற்றுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு ஊராட்சி மன்ற தலைவி சுதா பட்டியல் இனத்தை சேர்ந்தவர் என்பதால் அவரை பள்ளியில் கொடி ஏற்ற அனுமதி மறுக்கப்படுகிறது. எனவே இது குறித்து மாவட்ட கலெக்டர் உடனடியாக விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com