ஊராட்சி துணை தலைவர், சிகிச்சை பலனின்றி சாவு

ஏனங்குடியில் கீழே விழுந்து காயம் அடைந்த ஊராட்சி துணை தலைவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ஊராட்சி துணை தலைவர், சிகிச்சை பலனின்றி சாவு
Published on

திட்டச்சேரி:

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் ஏனங்குடி ஊராட்சி பண்டார புளியங்குடியை சேர்ந்தவர் வீரபாண்டியன் (வயது 48).இவர் ஏனங்குடி ஊராட்சி மன்ற துணை தலைவராக உள்ளார்.இவர் கடந்த 13-ந் தேதி இரவு தனது வீட்டின் வாசலில் தவறி கீழே விழுந்துள்ளார்.அதில் தலையில் காயம் ஏற்பட்டு கீழே கிடந்தவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு நாகை அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.அங்கிருந்து பின்னர் மேல்சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.அங்கிருந்து தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.இந்த நிலையில் வீரபாண்டியன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.இது குறித்து திருக்கண்ணபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com