ஊராட்சி தலைவர், துணை தலைவர் மோதல்

மயிலம் அருகே ஊராட்சி தலைவர், துணை தலைவர் இடையே மோதல் ஏற்பட்டது. இது தொடர்பாக 12 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஊராட்சி தலைவர், துணை தலைவர் மோதல்
Published on

மயிலம்

மயிலம் அருகே உள்ள கேணிப்பட்டு ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் புவனேஸ்வரி(வயது 42). இவர் நேற்று  அதே கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் நடைபெற்ற வேலையை பார்வையிட்டார்.

அப்போது அங்கு அதே ஊராட்சி மன்ற துணை தலைவரான சேகரின் மனைவி இந்துமதி(வயது 30) வேலை செய்து கொண்டிருந்தார். ஆனால் அவர், 100 நாள் வேலைக்கு தேவையான உபகரணங்கள் கொண்டு வரவில்லை. இதனை ஊராட்சி மன்ற தலைவர் புவனேஸ்வரி தட்டிக்கேட்டார். இதனால் இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டு, மோதலாக மாறியது.

12 பேர் மீது வழக்கு

இது பற்றி அறிந்ததும் ஊராட்சி மன்ற தலைவர் புவனேஸ்வரியின் ஆதரவாளர்களும், துணை தலைவர் சேகரின் ஆதரவாளர்கள் ஒன்று திரண்டு வந்து ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர்.

இது குறித்து இரு தரப்பினரும் மயிலம் போலீஸ் நிலையத்தில் தனித்தனியாக புகார் கொடுத்தனர். அதன்பேரில் ஊராட்சி மன்ற தலைவர் புவனேஸ்வரி, இவரது கணவர் ஜெயசங்கர், செந்தில், ஊராட்சி மன்ற துணை தலைவர் சேகர், இவரது மனைவி இந்துமதி, இவரது ஆதரவாளர்களான கார்த்திகேயன், பிரபாகரன், மோகன், சஞ்சய், கோபாலகிருஷ்ணன், ஏழுமலை, முனியப்பன், ஆகிய 12 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com