ஊராட்சி செயலர் சாவு

கீழையூர் அருகே வேன்மோதி ஊராட்சி செயலர் இறந்தார்.
ஊராட்சி செயலர் சாவு
Published on

நாகை மாவட்டம் கீழையூர் ஒன்றியம் காரைநகர் பகுதியை சேர்ந்தவர் வெற்றிச்செல்வன் (வயது53). இவர் கருங்கண்ணி ஊராட்சியில் ஊராட்சி செயலராக பணிபுரிந்து வந்தார். நேற்றுமுன்தினம் இரவு இவர் தனது வீட்டிலிருந்து கிழக்கு கடற்கரை சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது நாகப்பட்டினத்தில் இருந்து வந்த சுற்றுலா வேன் எதிர்பாராதவிதமாக வெற்றிச்செல்வன் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் கீழையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com