தியாகராஜர் கோவிலில் பங்குனி திருவிழா நிறைவு

திருவாரூர் தியாகராஜர் கோவிலில் நடைபெற்ற பங்குனி திருவிழா நிறைவடைந்தது.
தியாகராஜர் கோவிலில் பங்குனி திருவிழா நிறைவு
Published on

கொரடாச்சேரி:

திருவாரூர் தியாகராஜர் கோவிலில் நடைபெற்ற பங்குனி திருவிழா நிறைவடைந்தது.

தியாகராஜர் கேவில்

திருவாரூர் தியாகராஜர் கோவிலில் பங்குனி திருவிழா 55 நாட்கள் நடைபெற்றது. இதில் முக்கிய நிகழ்வாக ஏப்ரல் 1-ந் தேதி திருவாரூர் ஆழி தேரோட்டம் நடந்தது.

நேற்று பங்குனிஉத்திர பெருவிழா நிறைவு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. அதை முன்னிட்டு கொடி இறக்கம் மற்றும் கோவில் ஆச்சாரியார்களுக்கு மரியாதை செய்யும் நிகழ்ச்சி நடந்தது.

கொடி இறக்கம் நிகழ்ச்சி

அதை தொடர்ந்து சந்திரசேகரர் மற்றும் ஆதி சண்டிகேஸ்வரர் ஆகியோர் எழுந்தருளி கொடிமரத்தில் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, பின்னர் கொடி இறக்கப்பட்டது.

தொடர்ந்து ஆச்சாரியார்கள் கொடியினை தோளில் சுமந்து சென்று கோவில் மண்டபத்தில் வைத்தனர். அதை அடுத்து கோவில் ஆச்சாரியார்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com