பங்குனி உத்திர விழா: மயிலம் முருகன் கோவிலில் தேரோட்டம்

பங்குனி உத்திர விழாவை முன்னிட்டு மயிலம் முருகன் கோவிலில் தேரோட்டம் நடைபெற்றது.
பங்குனி உத்திர விழா: மயிலம் முருகன் கோவிலில் தேரோட்டம்
Published on

மயிலத்தில் உள்ள மயில் வடிவ மலையில் வள்ளி, தெய்வானை சமேத முருகப் பெருமான் திருமண கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திரவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்தாண்டுக்கான விழா கடந்த 9-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

அதனை தொடர்ந்து தினந்தோறும் கோவிலில் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்று வருகிறது. மேலும் சாமி வீதிஉலாவும் நடைபெற்று வருகிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியாக தேரோட்டம் காலை 5.45 மணிக்கு நடைபெற்றது.

தெப்ப உற்சவம்

விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நாளை (வெள்ளிக்கிழமை) தெப்ப உற்சவமும், 19-ந்தேதி முத்துப்பல்லக்கில் சாமி வீதிஉலாவும், 20-ந்தேதி சண்டிகேஸ்வரர் உற்சமும் நடைபெற உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com