

பங்குனி உத்திர திருவிழாவைக் கொண்டாடும் வகையில் வரும் ஏப்ரல் 1-ம் தேதி நெல்லை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட கலெக்டர் சுகுமார் உத்தரவிட்டுள்ளார்.
இந்த உள்ளூர் விடுமுறை தினத்தில் நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள், அரசு அலுவலகங்கள், அரசு சார்ந்த நிறுவனங்கள் ஆகியவை செயல்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அவசர காலப் பணிகளுக்காகக் குறைந்த அளவிலான பணியாளர்களுடன் முக்கிய அரசு அலுவலகங்கள் இயங்கும்.
மேலும், ஏற்கனவே திட்டமிடப்பட்ட பொதுத்தேர்வுகள் மற்றும் அரசுத் தேர்வுகளுக்கு இந்த விடுமுறை பொருந்தாது. இந்த உள்ளூர் விடுமுறையை ஈடுசெய்யும் வகையில், ஏப்ரல் மாதத்தில் ஒரு குறிப்பிட்ட சனிக்கிழமை அன்று பணி நாளாக அறிவிக்கப்படும் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு பின்னர் வெளியாகும் என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டத்தைத் தொடர்ந்து, பங்குனி உத்திர திருவிழா விமரிசையாகக் கொண்டாடப்படும் தூத்துக்குடி மற்றும் தென்காசி மாவட்டங்களுக்கும் விரைவில் உள்ளூர் விடுமுறை குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.