மணலியில் உள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் வகுப்பறை மேற்கூரை சிமெண்டு பூச்சு மீண்டும் இடிந்து விழுந்ததால் பரபரப்பு

மணலியில் உள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் வகுப்பறையில் உள்ள மேற்கூரை சிமெண்டு பூச்சு மீண்டும் இடிந்து விழுந்ததால் பரபரபரப்பு ஏற்பட்டது.
மணலியில் உள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் வகுப்பறை மேற்கூரை சிமெண்டு பூச்சு மீண்டும் இடிந்து விழுந்ததால் பரபரப்பு
Published on

மணலி பாடசாலை தெருவில் மாநகராட்சி தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். கடந்த ஜூன் மாதம் பெய்த கன மழையில் இந்த பள்ளியில் உள்ள 2 வகுப்பறை கட்டிடத்தின் மேற்கூரையில் இருந்த சிமெண்டு பூச்சு இடிந்து விழுந்தது.

அந்த வகுப்பறையில் படித்த மாணவர்களை உடனடியாக வெளியேற்றி, அந்த வகுப்பறையை பூட்டி வைத்தனர். பின்னர் அந்த அறையின் மேற்கூரையில் மீண்டும் சிமெண்டால் பூசி பழுது பார்த்தனர். ஆனால் அந்த அறையை தொடர்ந்து பூட்டி வைத்து இருந்தனர்.

இந்தநிலையில் நேற்று காலை அந்த வகுப்பறையில் இருந்த பிளாஸ்டிக் சேரை எடுக்க வந்த பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் ஒருவர், சேரை அங்கிருந்து எடுக்கும்போது தீடீரென பள்ளி வகுப்பறை மேற்கூரையில் உள்ள சிமெண்டு பூச்சு மீண்டும் திடீரென மொத்தமாக இடிந்து விழுந்தது. இதனால் பள்ளி வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

அதிர்ஷ்டவசமாக அங்கு மாணவர்கள் யாரும் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. மிகவும் பழமையான அந்த பள்ளி கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய வகுப்பறைகள் கட்டித்தரவேண்டும் என்று மாணவர்களின் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com