‘பதவிக்காக எதையும் செய்ய துணிந்துவிட்டார் பன்னீர்செல்வம்’ - டி.டி.வி.தினகரன்

பன்னீர்செல்வத்தை அ.தி.மு.க.வில் இருந்து நீக்கியது சரியானதே என்பதை மக்கள் உணர்வார்கள் என டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.
‘பதவிக்காக எதையும் செய்ய துணிந்துவிட்டார் பன்னீர்செல்வம்’ - டி.டி.வி.தினகரன்
Published on

தஞ்சாவூர்,

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-

“மக்கள் பணியாற்ற வேண்டும் என்பதற்காக பன்னீர்செல்வமும், உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பனும் மற்றொரு கட்சிக்கு கூட செல்லலாம். ஆனால் பதவிக்காக எதையும் செய்ய பன்னீர்செல்வம் துணிந்துவிட்டார்.

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. ஆட்சிக்கு எதிராக 2017-ம் ஆண்டு பிப்ரவரி 18-ந்தேதி தி.மு.க. கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு ஆதரவாக பன்னீர்செல்வம் வாக்களித்தார். பன்னீர்செல்வத்தை அ.தி.மு.க.வில் இருந்து நீக்கியது சரியானதே என்பதை மக்கள் உணர்வார்கள்.

ஜெயலலிதா இருந்தவரை பரதனாக நடித்தவர் பன்னீர்செல்வம். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா புகழுக்கு களங்கம் விளைவிக்க முயற்சிப்பவர்களை மன்னிக்க முடியாது. உப்பை தின்றவர்கள் தண்ணீர் குடித்துத் தான் ஆக வேண்டும். 1989-ல் துகில் உரிந்த துரியோதன கூட்டம் தற்போது சிரிக்கிறது.”

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com