தமிழகத்தில் நடைபெறும் போராட்டங்கள் குறித்து ஆளுநருடன் பேசினோம், அவர் திருப்தியடைந்து உள்ளார் பழனிசாமி பேட்டி

தமிழகத்தில் நடைபெறும் போராட்டங்கள் குறித்து ஆளுநருடன் பேசினோம், அவர் எங்களுடைய பதிலில் திருப்தியடைந்தார் என பழனிசாமி கூறிஉள்ளார். #EdappadiPalaniswami
தமிழகத்தில் நடைபெறும் போராட்டங்கள் குறித்து ஆளுநருடன் பேசினோம், அவர் திருப்தியடைந்து உள்ளார் பழனிசாமி பேட்டி
Published on

சென்னை,

காவிரி பிரச்சினையில், சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை அமல்படுத்துவதற்கு காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்கவில்லை. இதனைக் கண்டித்து, தமிழகம் போராட்ட களமாக மாறி வருகிறது. ஸ்டெர்லைட்டுக்கு எதிராகவும் தமிழகத்தில் போராட்டங்கள் தீவிரமடைந்து வருகிறது. இந்தநிலையில் ஆளுநர் பன்வாரிலாலை ராஜ்பவனில் முதல்-அமைச்சர் பழனிசாமி சந்தித்து பேசினார். அவருடன் துணை முதல்-அமைச்சர் ஓ பன்னீர்செல்வம், அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் உடன் இருந்தனர். சந்திப்பை அடுத்து செய்தியாளர்களிடம் பேசிய முதல்-அமைச்சர் பழனிசாமி, தமிழகத்தில் நடைபெறும் போராட்டங்கள் குறித்து ஆளுநருடன் பேசினோம் என்றார்.

தமிழகத்தில் நடைபெறும் போராட்டங்கள் தொடர்பாக பேசினோம், எங்களுடைய பதிலை தெரிவித்தோம். ஆளுநர் எங்களுடைய விளக்கத்தில் திருப்தி அடைந்தார். பதில் திருப்தியாக இருப்பதாக தெரிவித்தார். தண்ணீர் பிரச்சனை பற்றியும் நாங்கள் பேசினோம். எங்களுடைய கருத்துக்களை மிகவும் உன்னிப்பாக கவனித்தார். காவிரி நீர் பிரச்சனை தொடர்பாக நடைபெறும் போராட்டம் தொடர்பாகவும் பேசினோம். உரிய பதிலை தெரிவித்தோம். தமிழக நிலவரம் தொடர்பாக அவரிடம் எடுத்துரைத்தோம் என கூறினார் முதல்-அமைச்சர் பழனிசாமி.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com