50 ஆண்டுகளாக தி.மு.க.வுக்கு கைகூடாத பாபநாசம் தொகுதி

1977 முதல் 1991-ம் ஆண்டு சட்டசபை தேர்தல் வரை காங்கிரஸ் கட்சியே வெற்றி பெற்றது.
50 ஆண்டுகளாக தி.மு.க.வுக்கு கைகூடாத பாபநாசம் தொகுதி
Published on

சென்னை,

கடந்த (2021) சட்டசபை தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பாபநாசம் தொகுதி மனிதநேய மக்கள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. அக்கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா போட்டியிட்டு வெற்றி பெற்றார். நடைபெற உள்ள சட்டசபை தேர்தலிலும் பாபநாசம் தொகுதியை அக்கட்சி கேட்டுவருகிறது. ஆனால், இந்த முறை தி.மு.க.வே போட்டியிடவேண்டும் என்று அக்கட்சியினர் கூறிவருகின்றனர்.

பாபநாசம் தொகுதியில் 1952-ம் ஆண்டு முதல் 1967-ம் ஆண்டு வரை காங்கிரஸ் கட்சியை சேர்ந்த வேட்பாளர்கள் தொடர் வெற்றியை பதிவு செய்துள்ளனர். 1971-ம் ஆண்டு தேர்தலில் மட்டும் தி.மு.க. வேட்பாளர் கணபதி வெற்றி வாகை சூடினார். அதன்பிறகு, 1977 முதல் 1991-ம் ஆண்டு சட்டசபை தேர்தல் வரை காங்கிரஸ் கட்சியே வெற்றி பெற்றது.

1989-ம் ஆண்டு பாபநாசம் தொகுதியில் போட்டியிட்டு ஜி.கே.மூப்பனார் வெற்றி பெற்றார். 1996, 2001-ம் ஆண்டு தேர்தல்களிலும் த.மா.கா.வே வெற்றி பெற்றது. 2006, 2011, 2016 ஆகிய தேர்தல்களில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு பாபநாசம் தொகுதி ஒதுக்கப்பட்ட நிலையில், அ.தி.மு.க. வெற்றி பெற்றது.

2021-ம் ஆண்டு தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர் ஜவாஹிருல்லா வெற்றி பெற்றார். பாபநாசம் தொகுதியில் 1971-ம் ஆண்டுக்கு பிறகு 50 ஆண்டுகளாக தி.மு.க. வேட்பாளர் வெற்றி பெற்றதாக வரலாறு இல்லை. கடந்த முறை உதயசூரியன் சின்னம் வெற்றி பெற்றாலும், போட்டியிட்ட வேட்பாளர் தி.மு.க.வை சேர்ந்தவர் இல்லை. இந்த முறை தி.மு.க.வே களம் இறங்க வேண்டும் என்று அக்கட்சியினர் கூறிவருகின்றனர். அவ்வாறு போட்டியிட்டால் தி.மு.க. வேட்பாளருக்கு வெற்றி உறுதி என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com