காகித ஆலை தொழிலாளர் சங்க வாயிற்கூட்டம்

காகித ஆலை தொழிலாளர் சங்க வாயிற்கூட்டம் நடைபெற்றது.
காகித ஆலை தொழிலாளர் சங்க வாயிற்கூட்டம்
Published on

புகழூர் காகித ஆலை தொழிலாளர் சங்கத்தின் சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காகித ஆலை 2-வது கேட் முன்பு வாயிற்கூட்டம் நடைபெற்றது. இதற்கு சங்க தலைவர் அரவிந்த் தலைமை தாங்கினார். கூட்டத்தில் ஊதிய உயர்வுக்கான பேச்சுவார்த்தை உடனடியாக தொடங்க வேண்டும். கொரோனாவினால் உயிரிழந்த தொழிலாளர்களது குடும்பத்திற்கு காலம் தாழ்த்தாமல் உரிய நிவாரணம் வழங்க வேண்டும். சங்கங்களுக்கான அங்கீகார தேர்தலை உடனடியாக நடத்திட வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டன. இதில், காகித ஆலை தொழிலாளர் சங்கத்தைச் சேர்ந்த சுமார் 80-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com