

சென்னை,
பாரா ஆசிய விளையாட்டு போட்டியில் வெண்கலம் வென்ற தமிழக வீராங்கனை பேபி சஹானா ரவிக்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-
ஜப்பானில் நடைபெற்றுவரும் பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், டேபிள் டென்னிஸ் பெண்கள் ஒற்றையர் கிளாஸ் 9 பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்திருக்கும் தமிழக வீராங்கனை பேபி சஹானா ரவிக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
விடாமுயற்சி மற்றும் தளராத தன்னம்பிக்கையால் வெண்கலப் பதக்கம் வென்று தமிழகத்திற்கும் தாய்நாட்டிற்கும் பெருமை சேர்த்திருக்கும் வீராங்கனை பேபி சஹானா ரவி அவர்களின் வெற்றிப் பயணம் மேன்மேலும் தொடர வாழ்த்தி மகிழ்கிறேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.