

பரமக்குடி,
தியாகி இமானுவேல் சேகரன் நினைவுநாளையொட்டி பரமக்குடியில் உள்ள அவரது நினைவிடத்தில் தி.மு.க. சார்பில் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் அமைச்சர்கள், எம்.பி.-எம்.எல்.ஏ.க்கள் கலந்துகொண்டனர்.
உதயநிதி ஸ்டாலின் அஞ்சலி
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் தியாகி இமானுவேல் சேகரன் 65-வது நினைவுநாள் நேற்று கடைபிடிக்கப்பட்டது.
இதையொட்டி அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த தி.மு.க. சார்பில் மாநில இளைஞர் அணி செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் பரமக்குடி வந்தார். அவருக்கு தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பின்னர் உதயநிதி ஸ்டாலின், பரமக்குடி பஸ் நிலையம் அருகில் உள்ள இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
அமைச்சர்கள்
அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, பெரியகருப்பன், ராஜகண்ணப்பன், மூர்த்தி, கயல்விழி, தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி விஜயன், ராமநாதபுரம் தொகுதி எம்.பி. நவாஸ்கனி.
எம்.எல்.ஏ.க்கள் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் (ராமநாதபுரம்), முருகேசன் (பரமக்குடி), தமிழரசி (மானாமதுரை),முன்னாள் எம்.பி. பவானிராஜேந்திரன் முன்னாள் அமைச்சர் டாக்டர் சுந்தரராஜ், முன்னாள் எம்.எல்.ஏ. முருகவேல், தி.மு.க. மாநில தீர்மானக்குழு துணை தலைவர் திவாகரன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் இன்பா ரகு, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் திசை வீரன், துணை தலைவர் வேலுச்சாமி.
பிரமுகர்கள்
ஒன்றிய செயலாளர்கள் பரமக்குடி ஜெயக்குமார், வக்கீல் குணசேகரன், வக்கீல் கதிரவன், போகலூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் சத்யா குணசேகரன், துணை தலைவர் வக்கீல் பூமிநாதன், ஒன்றிய கவுன்சிலர்கள் தேன்மொழி, முருகேசுவரி, கலையூர் ஒன்றிய கவுன்சிலர் நதியா மனோகரன், உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்ற ஒன்றிய செயலாளர் துரைமுருகன்.
மாவட்ட கவுன்சிலர் அருண் பிரசாத் கோவிந்தம்மாள், முதுகுளத்தூர் ஒன்றிய மகளிர் அணி செயலாளர் ராஜாத்தி கலைஞர், காரைக்குடி மண்டல தொழிலாளர் முன்னேற்ற சங்க தலைவர் முருகன், செயலாளர் பச்சம்மால், பொருளாளர் வின்சென்ட் அமலதாஸ், பரமக்குடி கிழக்கு ஒன்றிய துணைச் செயலாளர் சந்திரன், பொருளாளர் பாலச்சந்திரன், ஒன்றிய இளைஞரணி பிரபாகரன், கிழக்கு ஒன்றிய மாணவர் அணி பூஞ்சிட்டு குமரன், ஒன்றிய தகவல் தொழில்நுட்ப பிரிவு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார், ஊராட்சி தலைவர்கள் சின்னாள், கார்த்திக் பாண்டியன், கனகராஜ், வக்கீல் பிரிவு மாவட்ட துணைச் செயலாளர் பரமசிவம் உள்பட நிர்வாகிகள், தொண்டர்கள் அஞ்சலி செலுத்தினர்.