பரமக்குடி: காட்டுப்பன்றி தாக்கி சத்துணவு அமைப்பாளர் பலி

இந்த கொடூரத் தாக்குதலில் படுகாயமடைந்த காளிமுத்து, சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.
காட்டுப்பன்றி தாக்கி சத்துணவு அமைப்பாளர் பலி.
காட்டுப்பன்றி- காளிமுத்து
Published on: 

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே காட்டுப்பன்றி தாக்கி சத்துணவு அமைப்பாளர் ஒருவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

காட்டுப்பன்றி தாக்கி பெண் பலி

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள அரியனேந்தல் பூங்கா நகரைச் சேர்ந்த பெண் காளிமுத்து (வயது 56). இவர் குமரகுடி அங்கன்வாடி மையத்தில் சத்துணவு அமைப்பாளராகப் பணியாற்றி வந்தார். இந்த நிலையில் நேற்று இரவு (செவ்வாய்க்கிழமை) வீட்டின் அருகே உள்ள வயல்வெளி பகுதிக்கு இயற்கை உபாதை கழிக்க சென்றுள்ளார். அப்போது, அங்கு வந்த காட்டுப்பன்றி ஒன்று திடீரென அவரைத் தொடை மற்றும் முழங்கால் பகுதியில் பயங்கரமாக குத்தித் தாக்கியுள்ளது. இந்த கொடூரத் தாக்குதலில் படுகாயமடைந்த காளிமுத்து, சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.

போலீசார் விசாரணை

தகவலறிந்து வந்த போலீசார், அவரது உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பரமக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து பரமக்குடி தாலுகா போலீசாரும், வனத்துறை அதிகாரிகளும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதையடுத்து அப்பகுதியில் நிலவும் காட்டுப்பன்றிகளின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com