பரம்பிக்குளம், ஆழியார் பாசன விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் - ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

பரம்பிக்குளம், ஆழியார் பாசன விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
பரம்பிக்குளம், ஆழியார் பாசன விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் - ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
Published on

சென்னை,

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பரம்பிக்குளம் ஆழியார் பாசன விவசாயிகள், பாசன நீர் பங்கீட்டின்படி மாதத்திற்கு 7 நாட்கள் தண்ணீர் திறந்துவிடக்கோரி காங்கேயத்தில் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.

பி.ஏ.பி. பாசன திட்டத்தில் காங்கேயம், வெள்ளக்கோவில் கடைமடை பகுதிகளில் சுமார் 48 ஆயிரம் ஏக்கர் நிலம் விவசாயத்திற்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. பி.ஏ.பி. பாசன நீர் பங்கீட்டு சட்டப்படி 14 நாட்கள், அதாவது மடை விட்டு மடை 7 நாட்கள் தண்ணீர் திறந்துவிட வேண்டும்.

ஆனால், பாசன தண்ணீர் மாதத்திற்கு 7 நாட்களுக்கு பதிலாக 3 நாட்கள் தான் திறந்து விடுகிறார்கள். இவை கடைமடை பகுதிகளுக்கு 2 நாட்கள் தான் வருகிறது. பி.ஏ.பி. பாசன திட்டத்தின் உத்தரவாதத்தின்படி மாதத்திற்கு 7 நாட்கள் தண்ணீர் திறந்து விட்டால், விவசாயத்திற்கு தேவையான தண்ணீர் முழுமையாக கிடைத்துவிடும். விவசாயம் செழிக்கும், விவசாயிகள் மகிழ்ச்சி அடைவார்கள்.

எனவே, பரம்பிக்குளம், ஆழியார் பாசன விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றி அவர்களுக்கு ஓர் நிரந்தர தீர்வை ஏற்படுத்தி தர வேண்டும் என்று த.மா.கா. சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com