சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்திற்கு 10-ந்தேதி துணை ராணுவப்படை வருகை

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்திற்கு 10-ந்தேதி துணை ராணுவப்படை வருகை தர உள்ளது.
சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்திற்கு 10-ந்தேதி துணை ராணுவப்படை வருகை
Published on

சென்னை,

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற இருக்கிறது. இதையொட்டி, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. சிறப்பு திருத்த பணிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், இன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

இதேபோல, ஒவ்வொரு தேர்தலின்போது துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி, நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ள துணை ராணுவத்தினர் விரைவில் தமிழகம் வர இருக்கின்றனர்.

இதுகுறித்து, தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு முதற்கட்டமாக 50 மத்திய துணை ராணுவப் படையினர் மத்திய உள்துறை அமைச்சகம் நியமித்துள்ளது. இவர்கள் வருகிற மார்ச் 10-ந்தேதி தமிழகத்திற்கு வர இருக்கிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com