பரந்தூர் விமான நிலைய பணிகளை முடக்கக்கூடாது: கி.வீரமணி அறிக்கை

தமிழ்நாட்டு இளைஞர்களின் வேலைவாய்ப்பு பெருகும்.

பரந்தூர் விமான நிலைய பணிகளை முடக்கக்கூடாது: கி.வீரமணி அறிக்கை
Published on

சென்னை,

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி யிருப்பதாவது:-

சென்னை விமான நிலையத்தின் விரிவாக்கப் பணிகளுள் முக்கியமான பரந்தூர் விமான நிலையப் பணிகள் திடீரென நிறுத்தப்பட்டு உள்ளதாகச் செய்திகள் வருகின்றன.பரந்தூர் விமான நிலையத் திட்டத்துக்கு எதிராக ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தற்போதைய முதல்-அமைச்சர் விஜய் பரந்தூருக்குச் சென்று விவசாயிகளுக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்தார்.நீர் நிலைகளில் விமான நிலையம் கட்டக்கூடாது என்று விவசாயிகளும், இயற்கை ஆர்வலர்களும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், தற்போது விமான நிலையத்துக்கான பணிகள் நிறுத்தப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு நன்மை பயப்பதல்ல.

நீர் நிலைகளில் விமான நிலையம் கட்டக்கூடாது என்று விவசாயிகளும், இயற்கை ஆர்வலர்களும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், தற்போது விமான நிலையத்துக்கான பணிகள் நிறுத்தப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு நன்மை பயப்பதல்ல.

விமான நிலையங்களின் உருவாக்கம், விரிவாக்கம் என்பவை வெறும் பய ணிகள் தொடர்புடையது மட்டுமல்ல; பொருளாதாரப் பெருக்கத்தின் வாய்ப்பு. புதிய கட்டமைப்புப் பெருக்கத்துக்குத் தூண்டுகோல். பல பெரும் நிறுவனங்கள் முதலீடு செய்வதற்கான அடிப்படை ஈர்ப்பு.

அதன்மூலம் தமிழ்நாட்டு இளைஞர்களின் வேலைவாய்ப்பு பெருகும். உப தொழில் வாய்ப்புகள் அதிகமாகும். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த திட் டத்தை முழுமையான புரிதலின்றி கைவிடுதல் கூடாது. விமான நிலையப் பணியை நிறுத்திவிட்டு சிப்காட் கொண்டு வருவது வரவேற்கத்தக்கதல்ல. முந்தைய அரசு கொண்டு வந்து செயல்படுத்தத் தொடங்கிய திட்டத்தை இப்படி நிறுத்துவது அறிவுடைமையாகாது. எனவே பரந்தூர் விமான நிலைய பணிகளை முடக்கக்கூடாது.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்

X

Daily Thanthi
www.dailythanthi.com