செல்போன் பார்த்ததை கண்டித்த பெற்றோர்... பிளஸ்-2 மாணவி எடுத்த விபரீத முடிவு

கோப்புப்படம்
தீபாவளி பண்டிகை அன்று மாணவி படிக்காமல் செல்போன் பார்த்து கொண்டு இருந்ததை பெற்றோர் கண்டித்துள்ளனர்.
சேலம் மாவட்டம், ஓமலூரை அடுத்த காடையாம்பட்டி பேரூராட்சி கரட்டு கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ். இவருடைய மகள் நிவேதா (17 வயது). இவர் காடையாம்பட்டியில் அரசு மாதிரி பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். கடந்த தீபாவளி பண்டிகை அன்று மாணவி படிக்காமல் செல்போன் பார்த்து கொண்டு இருந்ததாக தெரிகிறது. இதை பெற்றோர் கண்டித்துள்ளனர்.
இதனால் மனமுடைந்த மாணவி வீட்டில் இருந்த 30-க்கும் மேற்பட்ட சர்க்கரை நோய்க்கான மாத்திரைகளை தின்று விட்டு மயங்கி கிடந்தார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் மாணவியை மீட்டு சிகிச்சைக்காக ஓமலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி மாணவி நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தீவட்டிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






