நெல்லையில் சாதியை குறிப்பிட்டு மாணவரை தாக்கியதாக பள்ளி தலைமை ஆசிரியர் மீது பெற்றோர் புகார்

மாணவரின் கை மற்றும் கழுத்துப் பகுதியில் காயங்கள் ஏற்பட்டுள்ள நிலையில், அவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
நெல்லையில் சாதியை குறிப்பிட்டு மாணவரை தாக்கியதாக பள்ளி தலைமை ஆசிரியர் மீது பெற்றோர் புகார்
Published on

நெல்லை,

நெல்லை டவுண் பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில், 10-ம் வகுப்பு மாணவரை தலைமை ஆசிரியர் ரத்தக்காயம் ஏற்படும் அளவிற்கு தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சம்பந்தப்பட்ட மாணவருக்கு கை மற்றும் கழுத்துப் பகுதியில் காயங்கள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், அவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

முன்னதாக பள்ளியில் சிறுநீர் கழிக்கச் சென்றபோது ஏற்பட்ட பிரச்சினையைத் தொடர்ந்து, பள்ளியின் தலைமை ஆசிரியர் அந்த மாணவரை சரமாரியாக தாக்கியதுடன், அவரது சாதியை குறிப்பிட்டு திட்டியதாக மாணவர் குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக பெற்றோர் காவல்துறையில் புகார் அளித்துள்ள நிலையில், இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com