முடி வெட்ட சொல்லி கண்டித்த பெற்றோர்... 9ம் வகுப்பு மாணவன் தற்கொலை

சம்பவத்தன்று இளையராஜா தனது மகனை முடிதிருத்தம் செய்யும் கடைக்கு அனுப்பி வைத்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சிவகங்கை,

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பழைய போஸ்ட் ஆபிஸ் தெருவில் வசித்து வருபவர் இளையராஜா பழவியாபாரி. இவரின் மகன் வேல் என்கிற வேல்முருகன் (வயது 15). கல்குறிச்சி அரசு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார்.

சம்பவத்தன்று இளையராஜா தனது மகனை முடிதிருத்தம் செய்யும் கடைக்கு அனுப்பி வைத்துள்ளார். சிறுவன் தனக்கு பிடித்தவகையில் பாக்ஸ் கட்டிங் வெட்டி வந்துள்ளார். வீட்டிற்கு வந்ததும் சிறுவனை கண்டித்த பெற்றோர், மீண்டும் கடைக்கு அனுப்பி முடியை ஒட்ட வெட்ட வைத்துள்ளனர்.

இதனால் மனமுடைந்துபோன வேல்முருகன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். முடிவெட்ட சொன்னதற்காக சிறுவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com