

கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் உத்தனப்பள்ளி அருகே கொத்தகுறுகையை சேர்ந்தவர் நாகராஜ். இவரது மகன் ஹரி (16 வயது). இவர் ராயக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் விடுமுறை நாட்கள் என்பதால் ஹரி வீட்டில் செல்போனில் 'கேம்' விளையாடிக் கொண்டிருந்தார். இதை அவருடைய பெற்றோர் கண்டித்ததாக தெரிகிறது.
இதனால் மனமுடைந்த ஹரி கடந்த 2-ந்தேதி விஷம் குடித்தார். இதைக் கண்ட உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஹரி இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் உத்தனப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.