பெற்றோர்கள் தங்களது குழந்தைகள் மீது முழு கவனம் செலுத்த வேண்டும்-போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் அறிவுறுத்தல்

பெற்றோர்கள் தங்களது குழந்தைகள் மீது முழு கவனம் செலுத்தி பாதுகாக்க வேண்டும் என்று போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் அறிவுறுத்தி உள்ளார்.
பெற்றோர்கள் தங்களது குழந்தைகள் மீது முழு கவனம் செலுத்த வேண்டும்-போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் அறிவுறுத்தல்
Published on

பெற்றோர்கள் தங்களது குழந்தைகள் மீது முழு கவனம் செலுத்தி பாதுகாக்க வேண்டும் என்று போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் அறிவுறுத்தி உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:-

3 சிறுவர்கள் சாவு

தூத்துக்குடி மாவட்டம் புதூர் அருகே உள்ள சிவலார்பட்டியில் விளையாடச் சென்ற 3 சிறுவர்கள் குளத்தில் மூழ்கி இறந்துள்ளனர். சிறுவர்கள் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். தற்போது கோடை விடுமுறை என்பதால் சிறுவர், சிறுமியர் அருகில் உள்ள கடற்கரை, ஆற்றங்கரை, கண்மாய், குளம் போன்ற நீர் நிலைகளுக்கு குளிப்பதற்கோ, விளையாடுவதற்கோ, நீச்சல் பயில்வதற்கோ ஆர்வத்துடன் இருப்பார்கள். பெற்றோர், தங்கள் குழந்தைகளை தனியாக செல்வதற்கு அனுமதிக்காதீர்கள்.

பாதுகாப்புடன் செயல்பட வேண்டும்

மேலும் சிறுவர்களிடம் இருசக்கர வாகனங்களை கொடுத்து அதை ஓட்ட அனுமதிப்பது மோட்டார் வாகன சட்டப்படி குற்றமாகும். அதை பெற்றோர்கள் முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

இது தவிர சிறுவர், சிறுமியர்களை திருவிழாக்களுக்கு அழைத்து செல்லும்போது அங்குள்ள வண்ண மின் விளக்குகள் மற்றும் மின் சாதனப்பொருட்கள் அருகில் செல்லாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

அதேபோன்று விளையாடுவதற்கு சிறுவர், சிறுமியர் கைகளில் செல்போனை கொடுப்பதை தவிர்க்க வேண்டும். சிறுவர்கள் வீட்டின் மொட்டை மாடிகளுக்கு பெற்றோர்கள் இல்லாமல் தனியாகச் சென்று விளையாடுவதையும் தவிர்க்க வேண்டும். எனவே பெற்றோர்கள் தங்களது குழந்தைகள் மீது முழு கவனம் செலுத்தி அவர்களை தங்களின் நேரடி கண்காணிப்பில் வைத்து பாதுகாப்புடன் செயல்பட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com