சிபிஎஸ்இ நடவடிக்கையை எதிர்த்து பெற்றோர் குரல் கொடுக்க வேண்டும்: அமைச்சர் அன்பில் மகேஸ்


சிபிஎஸ்இ நடவடிக்கையை எதிர்த்து பெற்றோர் குரல் கொடுக்க வேண்டும்: அமைச்சர் அன்பில் மகேஸ்
x
தினத்தந்தி 2 May 2025 11:21 AM IST (Updated: 2 May 2025 4:44 PM IST)
t-max-icont-min-icon

திமுக அரசு அனைத்து மாணவர்களுக்காகவும் போராடி வருகிறது என்று அமைச்சர் அன்பில் மகேஸ் கூறினார்.

திருச்சி,

சிபிஎஸ்இ பள்ளிகளில் 3, 5, 8ம் மாணவர்கள் குறைந்த மதிப்பெண் எடுத்தால் பெயில் (FAIL) என்ற நடைமுறை குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

சிபிஎஸ்இ பள்ளிகளில் 3, 5, 8ம் வகுப்பு மாணவர்களை பெயில் ஆக்கும் நடைமுறையை ஒருபோதும் ஏற்க முடியாது. சிபிஎஸ்இ பள்ளிகளில் "நோ ஆல் பாஸ்" தொடர்பாக கையெழுத்து கேட்டால் பெற்றோர் போட மறுத்து கேள்வி எழுப்ப வேண்டும். 5, 8-ம் வகுப்பு மாணவர்கள் தோல்வியடைந்தால் மீண்டும் அதே வகுப்பை படிக்க வைத்தால் மன அழுத்தம் உருவாகும். 5ம் வகுப்பு மாணவர்களை பெயில் (FAIL) ஆக்கினால் இடைநிற்றல் அதிகரிக்கும்.

சிபிஎஸ்இ நடவடிக்கையை எதிர்த்து பெற்றோர் குரல் கொடுக்க வேண்டும். சாக்லேட் சாப்பிடுற வயசு பிள்ளைக்கு எப்படி இதை புரிய வைப்பீங்க?. கடனை வாங்கி சிபிஎஸ்இ பள்ளியில் சேர்க்கும் பெற்றோர் எவ்வளவு மன உளைச்சலுக்கு ஆளாவார்கள்?. இதன் காரணமாக தான் தேசிய கல்விக் கொள்கையை தமிழக அரசு எதிர்க்கிறது. என்.சி.இ.ஆர்.டி. பாடங்கள் மூலம் வரலாற்றை மாற்ற மத்திய அரசு முயற்சிக்கிறது. சிபிஎஸ்இ-யின் இந்த நடவடிக்கையை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது.

தேசிய கல்விக் கொள்கை உள்ளே நுழைந்தால் மாநில கல்வி அமைப்பே இல்லாமல் போய்விடும் நிலை உருவாகும். தமிழக அரசின் நடவடிக்கையால் மாநிலப் பாடத்திட்ட மாணவர்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர். திமுக அரசு அனைத்து மாணவர்களுக்காகவும் போராடி வருகிறது. மாநில கல்விக் கொள்கையை வலுப்படுத்தும் வகையில் செயல்பட வேண்டும். வரலாற்றில் தேச விரோதிகளை, தியாகிகளாக மாற்றுகிறார்கள். தரமான கல்வி வழங்க புது புது திட்டங்களை உருவாக்கி வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Next Story