சென்னை விமான நிலையத்தில் பார்க்கிங் கட்டணம் இன்று முதல் உயர்வு!

விமான நிலையத்துக்கு வந்து 10 நிமிடங்களுக்குள் வெளியேறும் வாகனங்களுக்கு கட்டணம் இல்லை.
சென்னை விமான நிலையத்தில் பார்க்கிங் கட்டணம் இன்று முதல் உயர்வு!
Published on: 

மீனம்பாக்கம்,

சென்னை விமான நிலையத்தில் இன்று முதல் வாகனங்களுக்கான 'பார்க்கிங்' கட்டணம் திடீரென உயர்த்தப்பட்டு உள்ளது.

'பார்க்கிங்' கட்டணம் உயர்வு

சென்னை மீனம்பாக்கம் விமான நிலைய ஆணையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

இந்திய விமான நிலைய ஆணையம் ஒப்பந்த உடன்படிக்கையின் விதிகளுக்கு இணங்க சென்னை விமான நிலையத்துக்குள் வரும் அனைத்து வாகனங்களுக்கும், பார்க்கிங் கட்ட ணத்தை திருத்தி 5 சதவீதம் உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு இன்று(ஞாயிற்றுக்கிழமை) முதல் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி, கார்களுக்கு 30 நிமிடங்கள் வரையிலான கட்டணம் ரூ.85-ல் இருந்து ரூ.90 ஆகவும், ஒரு மணி நேரத்துக்கான கட்ட ணம் ரூ.110-ல் இருந்து ரூ.115 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. 1 முதல் 2 மணி நேரம் வரை நிறுத்துவதற்கான கட்டணம் ரூ.165-ல் இருந்து ரூ.175 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. 10 முதல் 24 மணி நேரம் வரை கார்களை நிறுத்துவதற்கான கட்டணம் ரூ.550-ல் இருந்து ரூ.580 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

இருசக்கர வாகனங்கள்

இருசக்கர வாகனங்களுக்கு முதல் ஒரு மணி நேரத்துக்கு ரூ.20, 2 மணி நேரத்துக்கு ரூ.35 என பழைய கட்டணங்கள் தொடர்கின்றன. 10 முதல் 24 மணி நேரம் வரை நிறுத்துவதற்கான கட்டணம் ரூ.100-ல் இருந்து ரூ.105 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. விமான நிலைய ஊழியர்களுக்கு மாதாந்திர பார்க்கிங் கட்டணமாக கார்களுக்கு ரூ.580. இருசக்கர வாகனங்களுக்கு ரூ.230 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

16 இருக்கைகளுக்கு குறைவான வாகனங்களுக்கு முதல் 30 நிமிடங்களுக்கான கட்டணம் ரூ.330-ல் இருந்து ரூ.345 ஆகவும், 10 மணி நேரத்துக்கான கட்டணம் ரூ.990-ல் இருந்து ரூ.1,040 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. 24 மணி நேரத்துக்கான கட்டணம் ரூ.1,155 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அபராதம்

16 இருக்கைகளுக்கு மேற்பட்ட வாகனங்களுக்கு முதல் 30 நிமிடங்களுக்கான கட்டணம் ரூ.660-ல் இருந்து ரூ.695 ஆகவும். 10 மணி நேரத்துக்கான கட்டணம் ரூ.1,985-ல் இருந்து ரூ.2,085 ஆகவும், 24 மணி நேரத்துக்கான கட்டணம் ரூ.2,315 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. பார்க்கிங் டிக்கெட்டை தவறவிட்டால் கார்களுக்கு ரூ.580, இருசக்கர வாகனங்களுக்கு ரூ.175 அபராதத்துடன் பார்க்கிங் கட்டணமும் வசூலிக்கப்படும். விமான நிலையத்துக்கு வந்து 10 நிமிடங்களுக்குள் வெளியேறும் வாகனங்களுக்கு கட்டணம் இல்லை என்ற நடைமுறை தொடரும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com