புயல் கரையை கடக்கும் வரை... சென்னையில் பூங்காக்களை மூட உத்தரவு

செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

வங்கக்கடலில் நிலைகொண்டு இருக்கும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையில் நேற்று முதல் விட்டு விட்டு மழை பெய்துவருகிறது.இதனால், சாலைகளின் பல்வேறு பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளதால், மக்கள் அவதியடைந்துள்ளனர். சென்னையில் பிற்பகலுக்கு மேல் மழை குறைந்த நிலையில், தற்போது மீண்டும் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக கிண்டி , ஈக்காட்டுத்தாங்கல் , எழும்பூர் , சைதாப்பேட்டை . வேளச்சேரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது.

இந்நிலையில் கனமழை எச்சரிக்கையையடுத்து சென்னையிலுள்ள அனைத்து பூங்காக்களையும் மூட மாநகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

கனமழை எச்சரிக்கையை திரும்பப்பெறும் வரை பொதுமக்கள் பாதுகாப்பு கருதி பூங்காக்களை மூட உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

X

Daily Thanthi
www.dailythanthi.com