நாடாளுமன்ற தேர்தல்: கமல்ஹாசன் வரும் 28-ம் தேதி நிர்வாகிகளுடன் ஆலோசனை

நாடாளுமன்ற தேர்தல் குறித்து கமல்ஹாசன் வரும் 28-ம் தேதி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.
நாடாளுமன்ற தேர்தல்: கமல்ஹாசன் வரும் 28-ம் தேதி நிர்வாகிகளுடன் ஆலோசனை
Published on

சென்னை,

மக்கள் நீதி மய்யம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அவர்களின் தலைமையில் நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள், கோயம்புத்தூர் மற்றும் சேலம் மண்டலங்களைச் சேர்ந்த கட்சி நிர்வாகிகள் கலந்துகொள்ளும் "2024 நாடாளுமன்றத் தேர்தல் கலந்தாலோசனைக் கூட்டம்' வருகிற 28-04-2023 (வெள்ளிக்கிழமை) அன்று மதியம் 2 மணியளவில் கோயம்புத்தூரில் நடைபெற உள்ளது.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள், கோயம்புத்தூர் மற்றும் சேலம் மண்டலங்களைச் சேர்ந்த கட்சி நிர்வாகிகள் இக்கூட்டத்தில் தவறாது கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com