

சென்னை,
தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் என்ஜினீயரிங் கல்லூரிகளில் 2020-2021-ம் கல்வியாண்டுக்கான தகுதி வாய்ந்த டிப்ளமோ படிப்பு முடித்தவர்கள், பகுதி நேர முதலாம் ஆண்டு பி.இ., பி.டெக் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் www.ptbetnea.com என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். 10-ந்தேதி (இன்று) காலை 10 மணி முதல் வருகிற 30-ந்தேதி மாலை 5 மணி வரை ஆன்லைன் வாயிலாக விண்ணப்பங்களை மாணவர்கள் பதிவு செய்யலாம். விண்ணப்பதாரர்கள் வங்கி வரைவோலையை சமர்ப்பிப்பதற்கும், இணையதள வசதி இல்லாத விண்ணப்பதாரர்கள் விண்ணப்பப்படிவத்தினை இணையதளம் வாயிலாக பதிவு செய்வதற்கும் தமிழ்நாடு என்ஜினீயரிங் சேர்க்கை சேவை மையத்தினை பயன்படுத்தலாம்.
இந்த கல்வியாண்டில் பகுதிநேர பி.இ., பி.டெக். பட்டப்படிப்பு கலந்தாய்வு இணையதளத்தின் வாயிலாக மட்டுமே நடைபெறும். மேலும் விவரங்களை www.ptbetnea.com என்ற இணையதள முகவரியில் சென்று தெரிந்துகொள்ளலாம்.
மேற்கண்ட தகவலை தொழில்நுட்ப கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.