மத அரசியலை எதிர்க்கும் விதமாகவே ராகுல் காந்தியின் யாத்திரையில் பங்கேற்பு.. கமல்ஹாசன் விளக்கம்

சென்னையில் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த திட்டமிட்டுள்ளதாக மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

சென்னை,

சென்னை அடையாறில் மக்கள் நீதி மன்றத்தின் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் அடுத்த கட்ட பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. அப்போது நிர்வாகிகள் மத்தியில் பேசிய கமல்ஹாசன், இந்தியாவில் மத அரசியலை பாரதீய ஜனதா கட்சி செய்துவருவதாகவும், மதத்திற்குள் பிரிவினை செய்வதை எதிர்க்கவேண்டிய கட்டாயம் இருப்பதாகவும் கூறினார்.

மத அரசியல் இந்தியாவை சிதைத்துவிடக்கூடாது என்ற நோக்கத்திற்காக தான் ராகுல் காந்தியின் யாத்திரையில் பங்கேற்க முக்கிய காரணமாக அமைந்தது என்றும் கூறினார்.

கட்சியின் வளர்ச்சி பணிகள் கூறித்து அவர் பேசும்போது, கட்சியினர் அனைவரும் ஒரே வித கருத்தோடு செயல்பட வேண்டும் என்றும், கட்சி தற்போது தான் தொடங்கப்பட்டுள்ளது என்பதால், தலைவர் கூறும் கருத்தை மட்டுமே நிர்வாகிகள் வெளி இடங்களில் பேசிவேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

மாறாக, கட்சி தலைமை கூறுவதற்கு மாறாக செயல்பட்டால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், பொங்கல் பண்டிகை வரவிருக்கும் சூழலில், சென்னை மெரினாவில் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவதற்கு திட்டமிட்டு உள்ளதாகவும், இதற்காக அனுமதி கேட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். அனுமதி கிடைக்கும் பட்சத்தில், அதற்கான அறிவிப்பு பின்னர் அறிவிக்கப்பட்டு என்றும் கூறினார்.  

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com