

திருப்பூர்,
திருப்பூர் அலகுமலை பகுதியில் பெண்கள் பாதுகாப்பு மற்றும் இளைஞர்கள் மேம்பாட்டு விழிப்புணர்வு மாரத்தான் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை நடைபெற்றது. இதை வீ த லீடர் அமைப்பின் தலைவர் அண்ணாமலை காலை 5 மணிக்கு கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் மாராத்தானில் கலந்து கொண்ட ஆயிரக்கணக்கான பெண்களுடன் சேர்ந்து அண்ணாமலை ஓடினார்.
மாரத்தான் போட்டியானது அலகுமலை அடிவாரம் வேலவன் மஹால் முன்பாக தொடங்கி, 10 கிலோ மீட்டர் வரை நடைபெறுகிறது. மாரத்தானில் சிறுவர்கள், இளைஞர்கள், பெண்கள், முதியவர்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் என 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இதில் வெற்றி பெறுபவர்களுக்கு ரூ.1 லட்சம் ரொக்க பரிசு வழங்கப்பட உள்ளது. இதை தவிர பல்வேறு பரிசுகளும், சான்றிதழும் வழங்கப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை திருப்பூர் வீ த லீடர் அமைப்பினர் செய்துள்ளனர். முன்னதாக சிறந்த பெண்களுக்கான விருதினை அண்ணாமலை வழங்கினார்.