

சென்னை,
சென்னை போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் வீட்டில் ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்து கொண்ட மாவட்ட செயலாளர்கள் மத்தியில் நாடாளுமன்ற தேர்தல் நிலைப்பாடு குறித்த கருத்துகளை கேட்டறிந்தார். பின்னர் ரஜினிகாந்த் பேசியதாவது:-
நாடாளுமன்ற தேர்தல் நமது இலக்கு அல்ல. 2017-ல் அரசியல் அறிவிப்பை வெளியிடும் போதே சட்டமன்ற தேர்தல் தான் நமது இலக்கு என்பதை தெளிவாக கூறியிருந்தேன். நமது இயக்கம் வித்தியாசமானது. நிர்வாகிகள் யாரும் பணம், பதவியை எதிர்பார்த்து இருக்கக்கூடாது. அப்படி எதிர்பார்ப்பவர்கள் யாராவது இருந்தால், அவர்கள் இப்போதே இங்கிருந்து வெளியேறி விடலாம்.