

மதுரை,
ஆங்கிலப் புத்தாண்டின் முதல் நாளான இன்று மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அமைச்சர் செல்லூர் ராஜு சாமி தரிசனம் செய்தார். அதன்பிறகு செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் செல்லூர் ராஜு கூறியதாவது:-
"தமிழக மக்களுக்கு எண்ணற்ற நலத் திட்டங்களை அ.தி.மு.க. அரசு செய்து உள்ளது. ஆகவே வரும் தேர்தலில் அ.தி.மு.க.விற்கு ஆதரவு தர வேண்டும். நடிகர்கள் தொடங்கும் கட்சிகள் எல்லாம் நிலைத்து நிற்காது. கமல்ஹாசன் டிவி நிகழ்ச்சியில் நடித்து கொண்டிருக்கிறார். மூன்று நாட்கள் தேர்தல் பிரச்சாரத்திற்கு வருவார்,அதன் பிறகு டிவி நிகழ்ச்சிக்கு சென்றுவிடுவார்.
அடுத்து அவரது படம் தயாராக இருக்கிறது அந்த படத்தின் சூட்டிங்கிற்கு சென்று விடுவார். ஆனால் அரசியலுக்கு அரசியலில் மக்களின் எதிர்பார்ப்பை செய்து கொடுக்க எங்களை போன்ற அரசியல்வாதிகள் இருக்கிறோம். ஆகவே கமல்ஹாசன் போன்றவர்களுக்கு அரசியல் ஒத்து வராது. நான் நாட்டை திருத்த போகிறேன் என கமல் சொல்ல முடியாது அவர் உலக நாயகன் அவரால் நடிக்க மட்டுமே முடியும்.
இவ்வாறு அமைச்சர் செல்லூர் ராஜு கூறினார்.