புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் ‘கட்சி நிதி’ - அமைச்சர் நிர்மல் குமார் தகவல்

கட்சி நிதி கொடுத்து விட்டு கிடைக்காமல் இருப்பவர்கள் யாராக இருந்தாலும் சொல்லலாம் என்று அமைச்சர் நிர்மல் குமார் கூறியுள்ளார்.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் ‘கட்சி நிதி’ - அமைச்சர் நிர்மல் குமார் தகவல்
Published on

சென்னை,

'கட்சி நிதி' பற்றி மின்சாரத்துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

புதுப்பிக்கத்தக்க எரிசக்திகளுக்காக விண்ணப்பங்கள் கொடுத்தவர்களை கேட்டால், 'பார்ட்டி பண்ட்' (கட்சி நிதி) என்றால் என்ன? என சொல்வார்கள். இப்போது கட்சி நிதி கொடுத்து விட்டு கிடைக்காமல் இருப்பவர்கள் யாராக இருந்தாலும் சொல்லலாம். அதை வாங்கி திரும்ப கொடுக்கவும் தயாராக இருக்கிறோம்.

கட்சிநிதி கொடுத்து பெரிய சிக்கலில் இருந்த துறை புதுப்பிக்கத்தக்க எரிசக்தித்துறை. ஒரு மெகாவாட்டுக்கு ரூ.20 லட்சம் முதல் ரூ.25 லட்சம் வரை வாங்கிக்கொண்டுதான் விண்ணப்பங்களே உள்ளே சென்று இருக்கிறது. அதன்பிறகு கமிஷன், இடம் உள்ளிட்டவை எல்லாம் சேர்த்துதான் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை இருந்துவந்தது.

அதை வெளிப்படையாக மாற்ற வேண்டும் என்ற நோக்கில், 'அப்ளிகேஷனை' உருவாக்கியுள்ளோம். 'பேட்டரி ஸ்டோரேஜ்' என்பதை முதன்மையாக கொண்டுதான் இதை செயல்படுத்த உள்ளோம். சோலார் மற்றும் காற்றாலை ஸ்டோரேஜ் இல்லாமல் அனுமதி கொடுத்து வைத்திருக்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com