

நீலகிரி,
நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பொங்கல் பரிசுத்தொகுப்பு பொருட்களை வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் இன்று நேரில் ஆய்வு செய்தார்.
இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், நீலகிரி மாவட்டம் சுற்றுலாத்துறையை நம்பியே உள்ளதால், சுற்றுலா பயணிகளின் வருகையை முழுமையாக தடை செய்ய முடியாது என தெரிவித்தார். அதே சமயம் தேவை ஏற்பட்டால் இ-பாஸ் நடைமுறை கொண்டு வரப்படும் என்றும் அவர் கூறினார்.