

திருச்சி,
மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து பயணிகளுடன் திருச்சி நோக்கி ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் வந்து கொண்டிருந்தது .
அப்போது நடுவானில் பயணி ஒருவருக்கு திடீரென உடல்நிலை குறைவு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அந்த விமானம் உடனடியாக இலங்கை விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. விமானம் தரையிறங்கியவுடன் அந்த பயணிக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
பின்னர் அந்த விமானம் திருச்சி விமான நிலையத்தை வந்தடைந்தது. இதனால் அந்த விமானத்தில் பயணம் செய்த 178 பயணிகளும் சற்று அவதி அடைந்தனர்.