பயணிகள் நிழற்கூடம்

விக்கிரமசிங்கபுரத்தில் ரூ.8½ லட்சத்தில் புதிய பயணிகள் நிழற்கூடம் கட்ட இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ. அடிக்கல் நாட்டினார்
பயணிகள் நிழற்கூடம்
Published on

விக்கிரமசிங்கபுரம்:

விக்கிரமசிங்கபுரம் நகராட்சி வடமலைசமுத்திரத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.8 லட்சத்தில் புதிய பயணிகள் நிழற்கூடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு விழா நடந்தது. இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ. தலைமை தாங்கி, புதிய பயணிகள் நிழற்கூடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.

நகராட்சி பணி மேற்பார்வையாளர் சரவணன், சுகாதார ஆய்வாளர் பொன் வேல்ராஜ், பனைவெல்ல சொசைட்டி தலைவர் டேவிட் டேனியல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com