ரூ.7 லட்சத்தில் பயணிகள் நிழற்குடை

பரமக்குடி அருகே ரூ.7 லட்சத்தில் கட்டப்பட்ட பயணிகள் நிழற்குடையை முருகேசன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.
ரூ.7 லட்சத்தில் பயணிகள் நிழற்குடை
Published on

பரமக்குடி,

பரமக்குடி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட நெல்மடூர் கிராமத்தில் பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக பயணிகள் நிழற்குடை கட்டப்பட்டுள்ளது. அதை முருகேசன் எம்.எல்.ஏ.குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார். நெல்மடூர் ஊராட்சி மன்ற தலைவர் சுகன்யா சதீஷ்குமார் அனைவரையும் வரவேற்றார். இதில் தி.மு.க. பரமக்குடி மேற்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, காங்கிரஸ் வட்டார தலைவர் கணேசன், ஊராட்சி மன்ற துணைத்தலைவர் ராமு, கிளைச்செயலாளர் முருகவேல், காளிமுத்து, அழகர்சாமி உள்பட கிராம மக்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com