

சென்னை,
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருப்பதி மற்றும் காட்பாடி வழித்தடத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் பயணிகள் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, திருப்பதியில் இருந்து காலை 6.40 மணிக்கு புறப்பட்டு காட்பாடி வரும் பயணிகள் ரெயில் வருகிற 27, மார்ச் 2, 6, 9, 13, 16, 20, 23, 27, 30 மற்றும் ஏப்ரல் 3, 6, 10, 13 ஆகிய தேதிகளில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. அதே தேதிகளில், காட்பாடியில் இருந்து இரவு 7.25 மணிக்கு புறப்பட்டு திருப்பதி செல்லும் பயணிகள் ரெயிலும் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.
இந்த நாட்களில், ரெயில் எண் 16854 (விழுப்புரம் - திருப்பதி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ்) காட்பாடி மற்றும் திருப்பதி இடையே பகுதியளவு ரத்து செய்யப்பட்டு, காட்பாடியிலேயே குறுகிய காலத்திற்கு நிறுத்தப்படும்.
இதேபோல், ரெயில் எண் 16853 (திருப்பதி - விழுப்புரம் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ்) அதே தேதிகளில் திருப்பதி மற்றும் காட்பாடி இடையே பகுதியளவு ரத்து செய்யப்படும், ரெயில் திருப்பதிக்கு பதிலாக காட்பாடியில் இருந்து மாலை 4.45 மணிக்கு பயணத்தைத் தொடங்கும்.
பயணிகள் சிரமத்தைத் தவிர்க்க, பயணத்திற்கு முன் ரெயில் நேரங்களைச் சரிபார்க்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.