

திருச்சி,
திருச்சி பொன்மலை பணிமனையில் இருந்து பராமரிப்பு பணியை முடித்துவிட்டு ஜங்சன் ரெயில் நிலையம் நோக்கி பயணிகள் ரெயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது கல்லுப்புளி மேம்பாலம் அருகில் ரெயில் சென்ற போது 2 பெட்டிகள் தடம் புரண்டு தரையில் ஓடியது.
இதனையடுத்து, தடம் புரண்ட ரெயில் பெட்டியை மீண்டும் தண்டவாளத்தில் நிலை நிறுத்தும் பணியில் ரெயில்வே ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால், சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த குருவாயூர் விரைவு ரெயில் நடுவழியில் நிறுத்தப்படுள்ளது. தடம் புரண்ட ரெயிலில் பயணிகள் யாரும் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.