பறவை மோதி பழுதடைந்த விமானத்தில் சென்னை வந்த பயணிகள் - பரபரப்பு


பறவை மோதி பழுதடைந்த விமானத்தில் சென்னை வந்த பயணிகள் - பரபரப்பு
x

பழுதடைந்த விமானம் என தெரியாமல் வந்த பயணிகள் சென்னையில் பத்திரமாக தரையிறங்கினர்.

சென்னை,

சென்னையில் இருந்து இலங்கைக்கு இன்று அதிகாலை ஏர் இந்தியா விமானம் ஒன்று 164 பேருடன் சென்றது. கொழும்பு விமான நிலையத்தில் தரையிறங்கும்போது விமானத்தின் மீது பறவை மோதியுள்ளது. இதுகுறித்து கொழும்பு விமான நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து விமான நிலைய பொறியாளர்கள் வரவழைக்கப்படனர். அவர்கள் விமானத்தில் சிக்கி இருந்த பறவையின் உடலை வெளியே எடுத்தனர். முதற்கட்ட ஆய்வுக்குப் பிறகு விமானத்தில் பாதிப்பு இல்லை என இலங்கை விமான நிலைய பொறியாளர்கள் தெரிவித்தனர்.

இதன் பின்னர் அந்த விமானம் அதிகாலை 3.20 மணிக்கு 147 பயணிகளுடன் சென்னை திரும்பியது. சென்னை தரையிறங்கியதும் அந்த விமானம் மீண்டும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. இந்த ஆய்வின்போது விமானத்தின் பேன் பிளேடில் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அந்த விமானத்தின் செயல்பாட்டை அதிகாரிகள் தற்காலிகமாக நிறுத்தினர். பழுதடைந்த விமானம் என தெரியாமல் வந்த பயணிகள் சென்னையில் பத்திரமாக தரையிறங்கியது அங்கு பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

1 More update

Next Story